ADDED : ஏப் 04, 2025 04:49 AM
கடலுார்: கஞ்சா மற்றும் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், செம்மண்டலம் பகுதியில் கஞ்சா மற்றும் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை சிலர் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கவியரசன் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட சோதனையில் செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ.க்கு எதிரே உள்ள முட்புதர் பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்ற கும்பலை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் கடலுார் வெளிச்செம்மண்டலத்தைச் சேர்ந்த நவின்,25, புதுப்பாளையம் காளிதாசன்,23, செம்மண்டலம் நிவாஸ்,23; என்பதும், கஞ்சா மற்றும் போதைக்காக மாத்திரைகளை விற்பதும் தெரிந்தது.
அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனர்.