/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
/
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது
ADDED : செப் 09, 2025 06:29 AM

கடலுார், : புதுச்சேரியிலிருந்து, கடலுாருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கடலுார் கே.என்.பேட்டை பைபாஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த பெரிய காரைக்காட்டை சேர்ந்த மணிமாறன், 29; என்ற வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.
அவரிடமிருந்து 52 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் மேல்புவனகிரியை சேர்ந்த இறையன்பு, 24; கீழ்புவனகிரியை சேர்ந்த நேதாஜி, 24; ஆகியோர் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததைக் கண்டறிந்து, அவர்களிடமிருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மூன்று பேர் மீதும், கடலுார் மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரிக்கின்றனர்.