ADDED : ஆக 01, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில், கஞ்சா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று முன்தினம் கே.என்.பேட்டையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, சந்தேகத்திற்கிடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், கே.என்., பேட்டை, சத்தியசாய் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (எ) பாம் ராஜேஷ்,27; மணி நகர் செந்தமிழ் செல்வன்,26; என்பதும், கஞ்சா பதுக்கியதும் தெரிந்தது. உடன், போலீசார், வழக்குப் பதிந்து ராஜேஷ், செந்தமிழ்செல்வனை கைது 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேப் போன்று, கடலுார் புதுநகர் போலீசார், புதுப்பாளையம் கெடிலம் ஆற்றங்கரை அருகே 50 கிராம் கஞ்சா மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் பதுக்கிய கே.என்.பேட்டையைச் சேர்ந்த சூர்யா,27; என்பவரை கைது செய்தனர்.