மாணவி தற்கொலை வழக்கு சேத்தியாத்தோப்பில் 3 பேர் கைது
மாணவி தற்கொலை வழக்கு சேத்தியாத்தோப்பில் 3 பேர் கைது
ADDED : ஜூன் 25, 2026 03:01 AM

சேத்தியாத்தோப்பு: கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பை சேர்ந்தவர் 19 வயது மாணவி. காட்டுமன்னார்கோவில் தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 19ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்பகுதி இளைஞர்கள் கிண்டல் செய்ததால் மன உளைச்சலில் மதுபாலா தற்கொலை செய்துகொண்டதாக உற வினர்கள் தெரிவித்தனர்.
மேலும், சிதம்பரம் மருத்துவமனை முன்பு, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மகன் சூர்யா 29; அருள்பிரகாசம் மகன் வினித் 22; மற்றும் 16 வயது சிறுவன் மாணவியை கிண்டல் செய்தது தெரியவந்தது.
அதையடுத்து, சிறுவன் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
