ADDED : ஜூன் 25, 2026 03:02 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: உளுந்துார்பேட்டை அருகே வாலிபர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வாடிப்பட்டி அடுத்த நிலகோட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்சக்திவேல், 25; இவர் சென்னை - மதுரை செல்லும் ஏதோ ஒரு ரயிலின் பொது பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது, பரிக்கல் அருகே ரயில் வந்தபோது, தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
நேற்று காலை 8:00 மணியளவில் தகவலறிந்த விருத்தாசலம் இருப்புபாதை போலீசார் அவரின் சடலத்தை கைப்பற்றி, விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து விருத்தாசலம் இருப்புபாதை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
