ADDED : ஜூன் 06, 2025 08:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்; சிதம்பரம் அருகே 3 குடிசை வீடுகள் அடுத்தடுத்து எரிந்து சேதமானது.
சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி, மீதிகுடி பகுதியைச் சேர்ந்தவர்கள் சரிதா, சுரேஷ், அமுதா. இவர்கள் நேற்று வழக்கம் போல் 100 நாள் வேலைக்கு சென்றனர். சிறிது நேரத்தில் மூவரின் வீடு மர்மமான முறையில் அடுத்தடுத்து எரியத் துவங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் நகைகள், பணம், வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.