/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கன மழையில் 3 வீடுகள் இடிந்து சேதம்
/
கன மழையில் 3 வீடுகள் இடிந்து சேதம்
ADDED : டிச 01, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில், 3 கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
டிட்வா புயல் காரணமாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக, பூவாலை கிராமம் பூபாலன், வயலாமூர் கிராமம் தேன்மொழி, அலமேலு மங்காரபுரம் கிராமம் இந்திரா ஆகிய, 3 பேரின், கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
மேலும், கே.பஞ்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரவிசங்கர் என்பவருடைய எருமை மாடு உயிரிழந்தது.
பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு வருவாய்த்துறையினர் சென்று விசாரித்து வருகின்றனர்.

