/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி
/
குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : டிச 01, 2025 06:36 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் - குண்டு உப்பலவாடி சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலுார் மஞ்சக்குப்பம்-குண்டு உப்பலவாடி சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இங்கு ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மழை காரணமாக சாலை பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

