/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாயமான 3 பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
/
மாயமான 3 பள்ளி மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு
ADDED : நவ 02, 2025 11:52 PM
கிள்ளை: மாயமான மூன்று பள்ளி மாணவிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கிள்ளை, ஏக்தா நம்பிக்கை மையத்தில், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 26 பள்ளி மாணவிகள் தங்கி, அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த அக்., 31ம் தேதி, 10ம் வகுப்பு படிக்கும், 3 மாணவிகள், அந்த மையத்தில் இருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து, ஏக்தா நம்பிக்கை மைய ஒருங்கிணைப்பாளர் வைதேகி, கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, மாணவிகளை தேடிவந்தனர். இந்நிலையில், மாணவிகள், சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். உறவினர்கள், அவர்களை அழைத்து வந்து கிள்ளை போலீசில்
ஒப்படைத்தனர். கிள்ளை போலீசார், மாணவிகளின் பெற்றோரை வரவைத்து அனுப்பி வைத்தனர்.

