/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சி செயலாளரை தாக்கிய 3 பேர் கைது
/
ஊராட்சி செயலாளரை தாக்கிய 3 பேர் கைது
ADDED : ஆக 22, 2025 10:16 PM
சிறுபாக்கம் : சிறுபாக்கம் அருகே ஊராட்சி செயலாளரை தாக்கிய சம்பவத்தில் 5 பேர் மீது வழக்குப் பதிந்து, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுபாக்கம் அடுத்த ம.கொத்தனுாரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 50; ஜா.ஏந்தல் கிராம ஊராட்சி செயலாளர்.
இவரை நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில் அப்பகுதி மக்கள் சிலர், ஊராட்சி அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி சிறை வைத்தனர்.
தகவலறிந்து வந்த துணை பி.டி.ஓ., மாணிக்கரசி ஊராட்சி செயலாளர் வேல்முருகனை மீட்டு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வேல்முருகனை சிலர் தாக்கி னர்.
இது குறித்த புகாரி ன் பேரில், ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, 40; உட்பட 5 பேர் மீது சிறுபாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, பெரியசாமி, மணிகண்டன், 36;, முத்தையா, 31; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.