UPDATED : ஜூலை 23, 2026 09:18 PM
ADDED : ஜூலை 23, 2026 08:53 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே காசு சூதாடிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் விஜயமாநகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நடுகாட்டு அம்மன் கோவில் பகுதியில் உள்ள முந்திரி தோப்பில், விருத்தாசலம் நாச்சியார்பேட்டையை சேர்ந்த ஜெயராமன் மகன் வெங்கடாஜலபதி; விஜயமாநகரம் புது இளவரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல்; பண்ருட்டி அங்குசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராம்குமார், 56; உளுந்துார்பேட்டையை சேர்ந்த சபியுல்லா, 46; நாச்சியார்பேட்டையைச் சேர்ந்த மாதேஷ்குமார், 25; பாலா, ஆகியோர் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார், வெங்கடாஜலபதி, சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்து, ராம்குமார், சபியுல்லா, மாதேஷ்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.
