தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலி டாக்டர் கைது: விருதையில் பரபரப்பு

போலி டாக்டர் கைது: விருதையில் பரபரப்பு

போலி டாக்டர் கைது: விருதையில் பரபரப்பு


UPDATED : ஜூலை 23, 2026 08:42 PM

ADDED : ஜூலை 23, 2026 08:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 08:42 PM ADDED : ஜூலை 23, 2026 08:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் மாவட்ட இணை இயக்குனர் பிரமிளாவிற்கு, கருவேப்பிலங்குறிச்சி அடுத்த காவனுார் கிராமத்தில் செயல்படும் தனியார் மெடிக்கலில், போலி டாக்டர் மருத்துவம் பார்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், இணை இயக்குனர் பிரமிளா நேற்று அந்த மெடிக்கலில் திடீர் சோதனை மேற்கொண்டார்.

அதில், அதேபகுதியை சேர்ந்த மெடிக்கல் உரிமையாளர் பூமிநாதன், 26, எம்.பி.பி.எஸ்., படிக்காமல் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து பூமிநாதனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us