ADDED : டிச 16, 2024 07:06 AM
காட்டுமன்னார்கோவில்; தெற்கிருப்பு பகுதியில் ஆடு திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் தெற்கிருப்பு பைபாசில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது பைக்கில் மூன்று இளைஞர்கள் ஆட்டுக்குட்டிகளுடன் நின்றனர்.
சந்தேகமடைந்த போலீசார், மூவரையும் பிடித்து விசாரித்தனர். அரியலுார் மாவட்டம், உடையார்பாளையம் அடுத்த நெல்லித்தோப்பு ராமலிங்கம் மகன் மணிமாறன் 23; கொளஞ்சி மகன் பிரபாகரன், 32; மற்றும் சிதம்பரம் அடுத்த கண்ணங்குடி எண்ணாநகரம் சங்கர் மகன் அஜித்குமார் 24, என்பதும் இவர்கள், பைக்கில் சென்று சாலையோரம் மேயும் ஆடுகளை திருடுவது வழக்கம் என, தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து, ஆட்டுக்குட்டிகளை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

