/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் ஸ்டேஷனில் மோதல் இருதரப்பு புகாரில் 3 பேர் கைது
/
போலீஸ் ஸ்டேஷனில் மோதல் இருதரப்பு புகாரில் 3 பேர் கைது
போலீஸ் ஸ்டேஷனில் மோதல் இருதரப்பு புகாரில் 3 பேர் கைது
போலீஸ் ஸ்டேஷனில் மோதல் இருதரப்பு புகாரில் 3 பேர் கைது
ADDED : ஏப் 16, 2025 07:25 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் இருதரப்பினர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் 2 முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் சாந்தி நிவாஸ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக உள்ள 7 ஏக்கர் நிலத்தை வாங்க பி.என்.பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் வி.சி., கட்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் அக்ரிமென்ட் போட்டு பயிர் செய்து வருகிறார்.
இந்நிலையில் அக்ரிமெண்ட் செல்லாது என அ.தி.மு.க., வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சிவக்குமார் கூறியதால் இருதரப்புக்கும் முன்விரோதம் உள்ளது. இது தொடர்பாக இருதரப்பினரும் நேற்று முன்தினம் மாலை நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்.அப்போது, இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் முன்னிலையில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து போலீசார், இருதரப்பிலும் அளித்த புகாரின் பேரில், நேற்று வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணன்,66; இவரது மகன் அஜித்குமார்,32; சிவக்குமார்,54; ஆகியோரை கைது செய்தனர்.