sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி டிரைவர்களிடம் பணம் பறிப்பு புதுச்சேரி வாலிபர்கள் 3 பேர் கைது

/

லாரி டிரைவர்களிடம் பணம் பறிப்பு புதுச்சேரி வாலிபர்கள் 3 பேர் கைது

லாரி டிரைவர்களிடம் பணம் பறிப்பு புதுச்சேரி வாலிபர்கள் 3 பேர் கைது

லாரி டிரைவர்களிடம் பணம் பறிப்பு புதுச்சேரி வாலிபர்கள் 3 பேர் கைது


ADDED : ஜூலை 12, 2025 04:02 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் லாரி டிரைவர்களை மிரட்டி பணம், மொபைல் போன் பறித்துச் சென்ற வழக்கில், புதுச்சேரி வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், வானுாரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 28; இவர், கடந்த மார்ச் 19ம் தேதி, தனது உறவினர் பிரகாஷ், 29; என்பவருடன் தனித்தனி டிப்பர் லாரிகளில் எம் சான்ட் ஏற்றிக்கொண்டு கடலுாருக்கு வந்தனர்.

அதிகாலை கடலுார் அடுத்த கே.என்.பேட்டை அருகே லாரியை நிறுத்தி விட்டு இருவரும் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள், லாரி டிரைவர்களை மிரட்டி 5,500 ரூபாய் ரொக்கம், 14,000 ரூபாய் மதிப்புள்ள 2 மொபைல் போன்களை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடிவந்தனர். போலீசார், கே.என்.பேட்டை புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

இதில், புதுச்சேரி, உறுவையாறு ஆறுமுகம் மகன் சந்தோஷ், 22; மூலக்குளம் தமிழ்ச்செல்வன் மகன் கருப்பு (எ) அந்தோணிராஜ், 25; வில்லியனுார் ரவி மகன் கார்த்திகேயன், 23; என்பதும், லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறித்ததையும் ஒப்புக் கொண்டனர். உடன், போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us