/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு
/
நடந்து சென்ற பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு
ADDED : ஏப் 21, 2025 11:00 PM
புவனகிரி:
நடந்து சென்ற பெண்ணிடம் மூன்று சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சீர்காழி அடுத்த ஆச்சாள்புரத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி மனைவி ராணி,50; உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் சிகிச்சைக்காக கீரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அருகில் உள்ள சித்த மருத்துவமனைக்கு நடந்து சென்றார்.
வங்கி அருகில் சென்ற போது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர், ராணி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்தனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பினர். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கீரப்பாளையம், புவனகிரி பகுதியில் மீண்டும் இதுபோன்ற திருட்டு சம்பவம் நடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.