/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் புனரமைக்கப்பட்ட 3 கட்டடங்கள் திறப்பு
/
என்.எல்.சி.,யில் புனரமைக்கப்பட்ட 3 கட்டடங்கள் திறப்பு
என்.எல்.சி.,யில் புனரமைக்கப்பட்ட 3 கட்டடங்கள் திறப்பு
என்.எல்.சி.,யில் புனரமைக்கப்பட்ட 3 கட்டடங்கள் திறப்பு
ADDED : அக் 25, 2025 11:15 PM

நெய்வேலி: என்.எல்.சி.,யில் துாய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மூன்று புதிய கட்டடங்களை என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி திறந்து வைத்தார்.
கடலுார் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனம், இந்திய அரசின் தொலைநோக்குத் திட்டமான துாய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுக்கிணங்க, மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியின் வழிக்காட்டுதலின் கீழ் பல சமூக அடிப்படை கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் பொது இடங்களை மறுசீரமைக்கும் பணிகளை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.
அதன்ஒரு கட்டமாக, நெய்வேலி வில்லுடையன்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள புனரமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள என்.எல்.சி., விருந்தினர் இல்லத்தில் புனரமைக்கப்பட்ட உணவுக்கூடம் மற்றும் டவுன்ஷிப் வட்டம் 12ல் உள்ள சிதிலமடைந்திருந்த வங்கிக் குடியிருப்புகள் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு, அனைத்து அடிப்படை மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பயிற்சி பெறும் மகளிருக்கான விடுதியாக கட்டி முடிக்கப்பட்டது.
இந்த 3 கட்டிடங்களையும் என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி திறந்து வைத்தார். என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மனிதவளத்துறை பொது மேலாளர்கள் ஓ.எஸ்.அறிவு, திருக்குமார், நகர நிர்வாகத்துறை பொதுமேலாளர் வைத்தியநாதன், என்.எல்.சி., மக்கள் தொடர்புத்துறை பொதுமேலாளர் கல்பனா தேவி உடனிருந்தனர்.

