/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி வழக்கு மர்ம நபரை பிடிக்க 3 தனிப்படை
/
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி வழக்கு மர்ம நபரை பிடிக்க 3 தனிப்படை
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி வழக்கு மர்ம நபரை பிடிக்க 3 தனிப்படை
ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி வழக்கு மர்ம நபரை பிடிக்க 3 தனிப்படை
ADDED : டிச 25, 2024 11:02 PM
கடலுார்; கடலுாரில் வங்கி ஏ.டி.எம்., மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை மூன்று தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார் சாவடியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அருகே, அதன் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் காலை வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்தபோது,
ஏ.டி.எம்., மைய கண்ணாடி மற்றும் மெஷின் உடைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் நேரில் சென்று சி.சி.டி.வி., பதிவுகளைக் ஆய்வு செய்தனர். அதில், மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர் சம்மட்டி கொண்டு ஏ.டி.எம்., மெஷினை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இயைதடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.
இதை தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கடலுார் டி.எஸ்.பி., மேற்பார்வையில், சப் டிவிஷன் குற்றப் பிரிவு, புதுநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் கொண்ட மூன்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடிவருகின்றனர்.
இச்சம்பவத்தில் பழைய குற்றவாளிகள் அல்லது, பழைய ஏ.டி.எம்., மெஷின் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனரா எனவும், மொபைல் போன் டவர் மூலம் அப்பகுதியில் வந்து சென்றவர்கள் குறித்தும், கைரேகை நிபுணர்கள் மூலம் கிடைத்துள்ள தடயங்கள் மூலமும் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

