/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை 33ம் ஆண்டு விழா
/
புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை 33ம் ஆண்டு விழா
புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை 33ம் ஆண்டு விழா
புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை 33ம் ஆண்டு விழா
ADDED : ஜன 02, 2026 04:28 AM

புவனகிரி: புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை 33ம் ஆண்டு விழா மற்றும் நுால் வெளியீட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
புவனகிரி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சீனுபாலாஜி தலைமை தாங்கினார்.
ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை ஊழியர் ராஜ்மோகன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெற்றிவேல், கண்ணன் முன்னிலை வகித்தனர். பேரவைத் தலைவர் கல்யாணசுந்தரம் வரவேற்றார்.
ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ஜெயராமன், அக்ஷயா மந்திர் கல்வி குழுமத் தலைவர் புருஷோத்தமன், சுந்தரேசன், ராஜகோபாலன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் எழுத்தாளர் ஜெயபாலன், எழுத்தாளர் வெற்றிச்செல்வி, தங்கஅன்பழகன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஒன்பது பேருக்கு முதல் மூன்று பரிசுகளை டாக்டர் கதிரவன் வழங்கினார்.
புவனை கல்யாணம் எழுதிய தமிழன் என்றே சொல்லடா நுாலின் முதல்பிரதியை கவிஞர் பாரதிக்குமார், வெளியிட வழக்கறிஞர் குணசேகரன் பெற்றுக் கொண்டார்.
தலைமையாசிரியர் தியாகராஜன் தலைமையில் நடத்த பட்டிமன்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் துவக்கவுரையாற்றினார். பாலமுருகன், கயல்விழி, மோகன்தாஸ், கீர்த்தனா ஆகியோர் வாதிட்டனர்.
முருகவேல் நன்றி கூறினார்.

