/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சர்ச்சுகளில் புத்தாண்டு வழிபாடு
/
சர்ச்சுகளில் புத்தாண்டு வழிபாடு
ADDED : ஜன 02, 2026 04:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் துாய பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அளவில் 2025 ம் ஆண்டிற்கான நன்றி வழிபாடு நடந்தது.
நள்ளிரவு 12:00 மணியளவில் பங்கு தந்தை மரிய அந்தோணி தலைமையில் உலக அமைதி வேண்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
அதேபோல், விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பம் பெரிய நாயகி அன்னை ஆலயம் மற்றும் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.

