/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
3,403 மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு போட ஏற்பாடு: வரும் 8ம் தேதி முதல் இருப்பிடம் நோக்கிச் செல்லும் அதிகாரிகள்
/
3,403 மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு போட ஏற்பாடு: வரும் 8ம் தேதி முதல் இருப்பிடம் நோக்கிச் செல்லும் அதிகாரிகள்
3,403 மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு போட ஏற்பாடு: வரும் 8ம் தேதி முதல் இருப்பிடம் நோக்கிச் செல்லும் அதிகாரிகள்
3,403 மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டு போட ஏற்பாடு: வரும் 8ம் தேதி முதல் இருப்பிடம் நோக்கிச் செல்லும் அதிகாரிகள்
ADDED : ஏப் 05, 2024 05:01 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3,403 வாக்காளர்கள் தபால் ஓட்டு போட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவு தினத்தன்று ஓட்டுச்சாவடி நேரில் சென்று ஓட்டு போட இயலாத 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் தபால் ஓட்டு மூலம் ஓட்டு போட விருப்பம் தெரிவித்து தகுதியுடைய வாக்காளர்களிடம் இருந்து படிவம் '12டி' பெறப்பட்டுள்ளது.
தொகுதியில் மூத்த குடிமக்கள் திட்டக்குடியில் 166 பேர், விருத்தாசலம் 172, நெய்வேலி 108, பண்ருட்டி 182, கடலுார் 301, குறிஞ்சிப்பாடி 90, புவனகிரி 171, சிதம்பரம் 265, காட்டுமன்னார்கோவில் 227 என 1,682 வாக்காளர்களும்; மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் திட்டக்குடியில் 235 பேர், விருத்தாசலம் 252, நெய்வேலி 140, பண்ருட்டி 168, கடலுார் 265, குறிஞ்சிப்பாடி 110, புவனகிரி 147, சிதம்பரம் 173, காட்டுமன்னார்கோவில் 231 என 1,721 வாக்காளர்கள் என மொத்தம் 3,403 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களிடம் இருந்து தபால் ஓட்டுகள் பெற கடலுார், பண்ருட்டி சட்டசபை தொகுதியில் தலா 5 குழுக்களும் மற்ற 7 தொகுதிகளில் தலா 3 குழுக்கள் வீதம் நியமிக்கப்பட்டு, தபால் ஓட்டுகள் பெறப்படுகிறது.
குழுக்கள் வரும் 8ம் தேதி முதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தாலுகா அலுவலகங்களிலிருந்து அலுவலர்கள், வாக்காளர்கள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று ஓட்டுகளை சேகரிக்கின்றனர்.
அலுவலர்கள் இருப்பிடத்திற்குச் செல்லும் போது வாக்காளர்கள் இருப்பிடத்தில் இல்லையெனில் மீண்டும் ஒரு நாளில் வாய்ப்பு வழங்கப்படும். இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கியும் ஓட்டு போடாதவர்கள் 19ம் தேதி நடைபெறும் தேர்தலின் போது ஓட்டுச்சாவடிக்குச் சென்று ஓட்டளிக்க முடியாது.
வாக்காளர்கள் ஓட்டு போடும் செயல் முறையை குழுவில் உள்ள நுண் பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு வீடியோ பதிவு செய்யப்படுவர். நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்கை எட்டுவதற்கு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

