/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்துக்கு இடையூறு; மாடு மேய்த்த 4 பேர் கைது
/
போக்குவரத்துக்கு இடையூறு; மாடு மேய்த்த 4 பேர் கைது
போக்குவரத்துக்கு இடையூறு; மாடு மேய்த்த 4 பேர் கைது
போக்குவரத்துக்கு இடையூறு; மாடு மேய்த்த 4 பேர் கைது
ADDED : நவ 18, 2024 08:27 PM
சிதம்பரம் ; சிதம்பரம், அண்ணாமலை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் மேய்த்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகளை மேய்க்க போலீசார் தடை விதித்துள்ளனர். இருப்பினும் போலீசாரின் எச்சரிக்கையை மீறி சிலர் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விடுகின்றனர்.
சிவபுரி சாலையில் பொறியியல் கல்லுாரி அருகில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக மாடு மேய்த்த கொத்தங்குடியை சேர்ந்த கல்யாணக்குமார், 58;என்பவரை அண்ணாமலை நகர் போலீசார் கைது செய்தனர்.
இதே போன்று அண்ணாமலை நகர் பகுதியில் மாடுகளை மேய்த்த மீதிகுடியைச் சேர்ந்த கந்தசாமி,44; கனகசபாபதி,64; அரவிந்த்,30; ஆகியோரை கைது செய்தனர்.