தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் கொலை வழக்கு: 4 பேருக்கு குண்டாஸ்

வாலிபர் கொலை வழக்கு: 4 பேருக்கு குண்டாஸ்

வாலிபர் கொலை வழக்கு: 4 பேருக்கு குண்டாஸ்


UPDATED : செப் 10, 2026 08:36 PM

ADDED : செப் 10, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2026 08:36 PM ADDED : செப் 10, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்:நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கடலுார், ரெட்டிச்சாவடி அடுத்த ரங்காரெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 10ம் தேதி தொழில் போட்டியில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை உள்ளிட்ட கும்பல் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொலை செய்தது.

இதுகறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, ஏழுமலை,47; அவரது மகன் பெருமாள்,19; வின்சன்ட்ராஜ்,24; துளசிமணி 19; அரவிந்த் (எ) விக்ரம்,20; ஜெயமூர்த்தி (எ) கபாலி,20; சின்னத்துரை,45; மற்றும் ஒரு சிறுவன் என 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களில் துளசிமணி,19; அரவிந்த் (எ) விக்ரம்,20; வின்சென்ட்ராஜ்,24; கபாலி (எ) ஜெயமூர்த்தி,29; ஆகியோரின் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., விவேகானந்த சுக்லா பரிந்துரையை ஏற்று, 4 பேரையும் குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஏழுமலை, அவரது மகன் பெருமாள் ஆகியோர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us