ADDED : செப் 10, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
வடலூர், செப்.2-
வடலூரில் வி.சி., கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது
வடலுாரில், சாலை விரிவாக்க பணியின் போது, நான்கு முனை சந்திப்பு பகுதியில் இருந்த அம்பேத்கர் மற்றும், பெரியார் சிலைகள் அகற்றப்பட்டது. மீண்டும் அந்த சிலைகளை பஸ் நிலையம் அருகே நிறுவன வலியுறுத்தி, வி.சி., கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் வடலுார் வடக்கு நகர பொருளாளர் பாலா தலைமை தாங்கினார். மாவட்ட நியமன செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை நகர செயலாளர் சிவகுரு, மகளிரணி மேற்கு ஒன்றிய செயலாளர் சுசீலா, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட துணை செயலாளர் கண்ணன், பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
