ADDED : ஜூலை 15, 2025 09:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம், ஆலடி அடுத்த பாலக்கொல்லை நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ், 42; குமார், 46; இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் உள்ளது. கடந்த 13ம் தேதி குமார் தர வேண்டிய பணத்தை சுரேஷ் திருப்பி கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த குமார், மகன்கள் சூரியா, 26; சுதன், 24; சுதாகர், 22, ஆகிய நால்வரும் சேர்ந்து, சுரேஷை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து குமார், சூரியா, சுதன் உட்பட 4 பேரை கைது செய்தனர்.