ADDED : அக் 05, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கியதில் நான்கு பசு மாடுகள் இறந்தன.
கடலுார் மாவட்டம், கம்மாபுரம் பகுதியில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அதில், மின்னல் தாக்கியதில், கோ.மாவிடந்தல் கிராமத்தில் ராஜா என்பவரின் வீட்டு தோட்டத்தில் கட்டியிருந்த 3 பசு மாடுகளும், கார்கூடல் கிராமத்தில் கோவிந்தராசு என்பவர் வீட்டின் முன் கட்டியிருந்த பசு மாடு ஒன்றும் இறந்தன.
இதுகுறித்து விருத்தாசலம் தாசில்தார் உதயகுமார் தலைமையில் வருவாய் துறையினரும், கம்மாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்னல் தாக்கி நான்கு மாடுகள் பலியான சம்பவம், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.