/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் காயம்
/
இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் காயம்
இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் காயம்
இறுதி ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 பேர் காயம்
ADDED : மார் 31, 2025 05:15 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் நடந்த இறுதி ஊர்வலத்தில், பட்டாசுகள் வெடித்து சிதறியதில், 4 பேர் படுகாய மடைந்தனர்.
கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் வான்பாக்கத்தில் மூர்த்தி, 60; என்பவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை 5:30 மணிக்கு நடந்தது.
சவ ஊர்வலத்துடன், மாலைகளை ஒரு வண்டியில் ஏற்றி வந்தனர். அதில், பட்டாசுகளை எடுத்து சென்றனர். ஊர்வலத்தில் ஒருவர் வானவெடி வெடித்தபடி சென்றார்.
ஆற்றின் அருகே சென்றபோது வானவெடி விட்டபோது, தீப்பொறி வண்டியில் இருந்த பட்டாசு மீது விழுந்து தீப்பிடித்தது.
இதனால் வண்டியில் இருந்த அனைத்து பட்டாசுகளும் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் பரபரப்பு நிலவியது. ஊர்வலத்தில் சென்றவர்கள் சடலத்தை போட்டு விட்டு அலறியடித்து ஓடினர்.
வண்டியில் சென்றதில் பலத்த தீக்காயமடைந்த வான்பாக்கம் திருஞானசம்பந்தம் மகன் ராஜேஷ், 22; குடிதாங்கி சாவடி விஜய்,35; ஆகியோர் கடலுார் தனியார் மருத்துவமனையிலும், சுந்தரமூர்த்தி மகன் கோகுல்,23, முருகன் மகன் நவீன்,25; கடலுார் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இதில், ராஜேஷின் ஒரு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.