ADDED : பிப் 19, 2026 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் துறைமுகம் சப் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிங்காரத்தோப்பு வலைபின்னும் கட்டடம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த பழனி,48; ரகு,49; வேல்முருகன்,42; நாகராஜ்,73; என தெரிந்தது. போலீசார்அவர்களிடமிருந்து 50 ரூபாய் மற்றும் புள்ளித்தாள்களை உடனடியாக பறிமுதல் செய்தனர்.
மேலும், வழக்குப்பதிந்து நான்கு பேரையும் கைது செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

