ADDED : அக் 25, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கதண்டு கடித்ததில் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
கடலுார் முதுநகர் அடுத்த சங்கொலிக்குப்பம் சாமி நகர் அருகில் 100 நாள் வேலை திட்டத்தில் நேற்று வாய்க்கால் துாய்மை பணி நடந்தது.
இப்பணியில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள மரத்தில் இருந்த கதண்டு கள் தொழிலாளர்களை கடித்தது.
இதில், சங்கொலிக்குப்பத்தைச் சேர்ந்த வரதராஜ் மனைவி சர்க்கரை அம்மாள்,68; தணிகாசலம் மனைவி விஜயராணி உட்பட 4 பேர் காயமடைந்தனர். இவர்கள், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து கடலுார், முதுநகர் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.