/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'
/
வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு 'சீல்'
ADDED : பிப் 18, 2024 12:18 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு இயங்கி வரும் காய்கறி கடைகளில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு நகராட்சி கமிஷனர் பானுமதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தனர். ஆனால், இதுவரை பலர் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதன் காரணமாக, நகராட்சி மேலாளர் கனிமொழி தலைமையில், வருவாய் ஆய்வாளர் ஷகிலாபானு மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேற்று முதல்கட்டமாக வாடகை செலுத்தாத 4 காய்கறி கடைகளுக்கு சீல் வைத்தனர்.
மேலும், வாடகை செலுத்தாத அனைத்து கடைகளும் விரைவில் சீல் வைக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.