ADDED : நவ 03, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே 400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை ரயிவே காலனி நகர் பகுதியில், பொது வினியோக திட்ட பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா தலைமையில் டி.எஸ்.ஓ., ராஜலிங்கம் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது கிழக்கு தெருவில் ரேஷன் அரிசி கேட்பாரற்று, அங்காங்கே தனித்தனியாக, 8 மூட்டை சிப்பம் கிடந்தது.
இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றி பண்ருட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உதவி தரக்கட்டுப்பாடு அலுவலரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

