/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 42 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
/
விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 42 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 42 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 42 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
ADDED : நவ 04, 2025 01:33 AM
நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பத்தில் ஒரே நாளில் விதிமுறை மீறி வாகனம் ஓட்டிய 42 வாகன ஓட்டிகளுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் வாகன விபத்துகளை குறைக்க எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, லைசன்ஸ் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டிச் செல்வோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியவர்களுக்கு 5 ஆயிரம், ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.  ஆயிரம், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் ஒரே நாளில் 42 வாகன ஓட்டிகளுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வசூலித்தனர்.