/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கணவரின் அத்தையை கத்தியால் வெட்டிய பெண் கைது
/
கணவரின் அத்தையை கத்தியால் வெட்டிய பெண் கைது
ADDED : நவ 04, 2025 01:33 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கணவரின் அத்தையின் கையை கத்தியால் வெட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி மனைவி ஆனந்தி, 38; சத்துணவு பொறுப்பாளர். இவரது கணவர் ராஜீவ்காந்தியின் அத்தையான திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய் கிராமத்தை சேர்ந்த கண்ணம்மாள், 55; இவர், ராஜீவ்காந்தியை பார்ப்பதிற்காக நேற்று தொட்டிக்குப்பம் கிராமத்திற்கு வந்தார்.
அப்போது, ஆனந்தி, கண்ணம்மாள் இடையை தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஆனந்தி, வீட்டில் இருந்த கத்தியால், கண்ணம்மாளின் வலது கையில் வெட்டினார். இதில், படுகாயமடைந்த கண்ணம்மாளுக்கு 16 தையல் போடப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்தியை கைது செய்தனர்.

