/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் முகாமில் குவிந்த விண்ணப்பங்கள் 45,273: மாவட்டத்தில் 29ம் தேதி முதல் அதிகாரிகள் ஆய்வு
/
வாக்காளர் முகாமில் குவிந்த விண்ணப்பங்கள் 45,273: மாவட்டத்தில் 29ம் தேதி முதல் அதிகாரிகள் ஆய்வு
வாக்காளர் முகாமில் குவிந்த விண்ணப்பங்கள் 45,273: மாவட்டத்தில் 29ம் தேதி முதல் அதிகாரிகள் ஆய்வு
வாக்காளர் முகாமில் குவிந்த விண்ணப்பங்கள் 45,273: மாவட்டத்தில் 29ம் தேதி முதல் அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 26, 2024 06:50 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய இரண்டு கட்டங்களாக நடந்த சிறப்பு முகாமில், 45 ஆயிரத்து 273 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்தில் சட்டசபை தொகுதிகள் வாரியாக வரும் 2025ம் ஆண்டு ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையொட்டி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய voters.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவும், 'VOTER HELP LINE' மொபைல் போன் செயலி வழியாகவும் வாக்காளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
வாக்காளர்கள் வசதிக்காக இம்மாதம் முதற்கட்டமாக 16 மற்றும் 17ம் தேதி ஆகிய தேதிகளிலும், இரண்டாம் கட்டமாக 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது.
இதில், புதிதாக பெயர் சேர்க்க 30 ஆயிரத்து 324 விண்ணப்பங்கள், நீக்கம் செய்ய 4,7,31, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்ய 10 ஆயிரத்து 218 என, மொத்தம் 45 ஆயிரத்து 273 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதுதவிர வரும் 28ம் தேதி வரை, voters.eci.gov.in என்ற இணையதளம் வழியாகவும், அந்தந்த ஆர்.டி.ஓ., அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் நேரிடையாகவும் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களையும், வரும் 28ம் தேதி வரை பெறப்பட உள்ள விண்ணப்பங்களையும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் ஓட்டுச்சாவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வரும் 29ம் தேதி முதல், வீடு வீடாக சென்று கள ஆய்வு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
கள ஆய்வில் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நீக்கம் செய்வர். தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கணினியில் வாக்காளர்கள் விவரங்கள் பதிவேற்றும் பணிகள் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இப்பணிகள் முடிந்ததும் ஜன., 6ம் தேதி, வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறும். ஜனவரி 25ம் தேதி பிறகு வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர்களின் வீடுகளுக்கு தபால் மூலமாக அனுப்பப்பட உள்ளது.