வேலை நிறுத்த அறிவிப்பு வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை
வேலை நிறுத்த அறிவிப்பு வங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை
UPDATED : செப் 23, 2026 04:49 PM
ADDED : செப் 23, 2026 03:42 PM
நெல்லிக்குப்பம்:வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பால் நாளை மறுநாள் முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள், 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இருப்பினும், அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதன் மீண்டும் வரும் 28 ம் தேதி முதல் 30ம் தேதிவரை மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்தத்திற்கு, வங்கி பணியாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
நாளை மறுநாள் 26 ம் தேதி நான்காம் சனிக்கிழமை மற்றும் 27 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை. 28, 29 மற்றும் 30 தேதிகளில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளை மறுநாள் முதல் 30ம் தேதிவரை தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது. எனவே அதற்கு முன்பாக தங்களது வங்கி பணிகளை முடித்து கொள்ளுமாறு வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகிறது.
