தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாநில அளவிலான கராத்தே போட்டி பாபா பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டி பாபா பள்ளி மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான கராத்தே போட்டி பாபா பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : செப் 23, 2026 03:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 03:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில், பரங்கிப்பேட்டை பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

சேத்தியாதோப்பு அடுத்த பூதங்குடி சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டி நடந்தது. இப்போட்டியில், பரங்கிப்பேட்டை பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 25 பேர் பங்கேற்று, கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

கட்டா பிரிவில் ஜீவிதன் முதலிடமும், நிஷோக் இரண்டாமிடமும், கமலேஸ்வரன், ஹரிசுதன் மூன்றாம் இடமும் பிடித்தனர். சண்டை பிரிவில், ஜீவிதன் முதலிடமும், ஸ்ரீ கார்த்திக் இரண்டாமிடமும், கவியரசன், துவாரகேஷ், அக்மல் மூன்றாம் இடம் பிடித்தனர்.

சிலம்பம் பிரிவில், நிஷோக், கவியரசன், கமலேஸ்வரன் முதலிடமும், சித்தார்பிரியன், ஹரிசுதன், பேரீஸ்வரன் இரண்டாமிடமும் பிடித்தனர்.

சாதனை படைத்த மாணவர்களை, பள்ளியின் நிறுவனர் சண்முகம், தாளாளர் வைரமணி , கராத்தே பொறுப்பு ஆசிரியர் அலமேலு, கராத்தே பயிற்சியாளர் ரெங்கநாதன் ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us