ADDED : செப் 23, 2026 03:42 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக வாசலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அருணகிரி தலைமை தாங்கினார். அதில், புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் நோய்க்கான சிகிச்சை செலவு தொகை பேக்கேஜ் என அறிவித்துள்ளது.
அதனை கைவிட்டு முந்தைய திட்டத்தின் படி சிகிச்சை தொகையை தனித்தனியே பட்டியலிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும். 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி கோஷமிடப்பட்டது.
