/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சுரங்க பூங்காவில் 5 மான்கள் மர்ம மரணம்
/
என்.எல்.சி., சுரங்க பூங்காவில் 5 மான்கள் மர்ம மரணம்
என்.எல்.சி., சுரங்க பூங்காவில் 5 மான்கள் மர்ம மரணம்
என்.எல்.சி., சுரங்க பூங்காவில் 5 மான்கள் மர்ம மரணம்
ADDED : டிச 18, 2025 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: என்.எல்.சி., சுரங்க பூங்காவில் அடுத்தடுத்து, ஐந்து மான்கள் உயிரிழந்தன.
நெய்வேலி, என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களில், பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட பின், அந்த பள்ளங்களில் மண் நிரப்பப்பட்டு, மீண்டும் விவசாயம் செய்யப்படுகிறது. சில இடங்கள், பூங்காக்களாக பராமரிக்கப்படுகின்றன. அங்கு மான்கள், முயல்கள், வாத்துகள், மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
பூங்காவில், நேற்று முன்தினம் மதியம் ஒரு ஆண் மான் இறந்து கிடந்தது. இந்நிலையில் நேற்று மதியம், அதே பகுதியில் நான்கு பெண் மான்கள் இறந்து கிடந்தன.
இதுகுறித்து வனத்துறை மற்றும் கால்நடைத்துறையினர் விசாரிக்கின்றனர்.