ADDED : அக் 16, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் நம்பி மனைவி கவிதா, 40. நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை, இரவு 7:00 மணியளவில் வீட்டிற்கு ஓட்டிவந்தார். திட்டக்குடி - ராமநத்தம் சாலையை கடந்தபோது, தொழுதூரில் இருந்து திட்டக்குடி நோக்கி வந்த தனியார் பஸ் ஆடுகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 ஆடுகள் இறந்தன. 2 ஆடுகள் காயமடைந்தன.
இதையறிந்த அப்பகுதி மக்கள் பஸ்சை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள்வடிவழகன் தலைமையிலான போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று, இரவு 8:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.