/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆயுதப்படை பிரிவில் 52 போலீசார் இடமாற்றம்
/
ஆயுதப்படை பிரிவில் 52 போலீசார் இடமாற்றம்
ADDED : மே 24, 2025 11:48 PM

கடலுார்: கடலுார் ஆயுதப்படை காவல் பிரிவில் இருந்து 53 போலீசார் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவில் மொத்தம் 535 பேரில் 523 போலீசார் பணியில் இருந்தனர். இதில், பணி மூப்பு அடிப்படையில் 113 முதல் நிலை போலீசார், லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாறுதல் கோரி விருப்ப மனு அளித்தனர்.
அதன்படி, கடலுார் ஆயுதப்படை மைதானத்தில், காலி பணியிடங்கள் இருந்த திட்டக்குடி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு ஆகிய உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இடமாறுதலுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டன.
எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் பணி மாறுதல் குழு அதிகாரிகள், நேர்காணல் நடத்தினர். இடமாறுதல் கோரி விண்ணப்பித்த 113 ஆயுதப்படை போலீசாரில் 53 போலீசார் மட்டுமே நேர்காணலில் பங்கேற்றனர். அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் கடலுார் 3, சேத்தியாத்தோப்பு 6, சிதம்பரம் 5, மருதுார் போலீஸ் ஸ்டேஷன் 3, நெய்வேலி டவுன்ஷிப் 3, விருத்தாசலம் 4, சிதம்பரம் 5, திட்டக்குடி 1 என 28 போலீசார், 25 மகளிர் போலீசார் உட்பட 53 பேர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு எஸ்.பி.,ஜெயக்குமார் வழங்கினார்.
ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், ஆயுதப்படை டி.எஸ்.பி., அபண்டராஜ், இன்ஸ்பெக்டர்கள் அருள்செல்வன், குருமூர்த்தி, நிர்வாக அலுவலர்கள் சிவக்குமார், ஜான்சன் சகாயராஜ் உடனிருந்தனர்.