sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு இ-சேவை மையங்களில் வழங்கிய சான்றிதழ்கள் 53,356! ஆன்லைன் மூலம் பொதுமக்களின் தேவைகளுக்கு தீர்வு

/

அரசு இ-சேவை மையங்களில் வழங்கிய சான்றிதழ்கள் 53,356! ஆன்லைன் மூலம் பொதுமக்களின் தேவைகளுக்கு தீர்வு

அரசு இ-சேவை மையங்களில் வழங்கிய சான்றிதழ்கள் 53,356! ஆன்லைன் மூலம் பொதுமக்களின் தேவைகளுக்கு தீர்வு

அரசு இ-சேவை மையங்களில் வழங்கிய சான்றிதழ்கள் 53,356! ஆன்லைன் மூலம் பொதுமக்களின் தேவைகளுக்கு தீர்வு


ADDED : ஜன 22, 2025 11:48 PM

Google News

ADDED : ஜன 22, 2025 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இ-சேவை மையங்கள் மூலம் கடந்த ஓராண்டில் 53,356 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், அனைத்து அரசுத்துறைகளும் நவீனமயமாகி வருகின்றன. பொதுமக்கள், 'இ-சேவை' மையங்களில், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து, கட்டண அடிப்படையில், சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து

கொள்கின்றனர். கடலுார் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் அனைத்து 10 தாலுகா அலுவலகங்கள் மற்றும் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய 3 நகராட்சி அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த மையங்களில் ஜாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், விதவை சான்றிதழ், ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றிதழ், ஆதரவற்ற விதவை சான்றிதழ், இயற்கை சீற்றத்தால் சான்றிதழ்கள் தொலைந்ததற்கான சான்றிதழ், இணைய வழி பட்டா மாற்றம், கலப்பு திருமண சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட சான்றிதழ், மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகை விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி கருவிகளுக்கான விண்ணப்பம், விதவை மகள் திருமண உதவித்தொகை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண உதவித்தொகை விண்ணப்பம், கணவனால் கைவிடப்பட்டவர் உதவி தொகை விண்ணப்பம், ஒப்பந்ததாரர் உரிமை விண்ணப்பம், தற்காலிக பட்டாசு உரிமம் (தீபாவளி சமயத்தில்), வண்டல் மண் எடுப்பதற்கான விண்ணப்பம், முதியோர் உதவித்தொகை விண்ணப்பம் போன்ற தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து வழங்கப்படுகிறது.

மேலும் பயிர் காப்பீடு, மின் கட்டணம் செலுத்துதல், மொபைல் ரீசார்ஜ், தமிழ்நாடு பாடநுால் கழக புத்தகங்கள் விண்ணப்பித்தல் போன்ற சேவைகளும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை, பொதுமக்கள் டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், யூ.பி.ஐ., வாயிலாக டிஜிட்டல் முறையில் செலுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்த பல்வேறு வகையான சான்றிதழ்களுக்கு, கடந்த ஜன., 2024 முதல் டிச., மாதம் வரை 53,356 சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us