/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டோல்கேட் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது
/
டோல்கேட் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது
ADDED : மார் 19, 2025 09:27 PM
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே டோல்கேட் ஊழியரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த கொத்தட்டையை சேர்ந்தவர் அபிநாத், 21; இவர், நேற்று கொத்தட்டை டோல்கேட்டில் பணியில் இருந்தார். அப்போது, மேலமூங்கிலடியை சேர்ந்த தில்லை நடராஜன், 51, என்பவர், கடலுாரில் இருந்து சிதம்பரம் நோக்கி காரில் வந்தார்.
டோல்கேட் கட்டணம் வசூலிப்பதற்கு நிறுத்திய போது, அவரது காரில் உள்ள பாஸ்டேக்கில் போதுமான தொகை இல்லை. இது குறித்து அபிநாத் கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. அப்போது, தில்லை நடராஜன் மற்றும் காரில் இருந்த அவரது நண்பர்கள் உட்பட 6 பேர் சேர்ந்து, டோல்கேட் ஊழியர் அபிநாத்தை தாக்கினர். புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, 6 பேரையும் கைது செய்தனர்.