ADDED : செப் 20, 2025 07:06 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் பைக்குகளில் கஞ்சா கடத்தி வந்த 6 பேரை போலீசா ர் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் இளவழகி தலைமையில் வடலுார்-நெய்வேலி மெயின் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மந்தாரக்குப்பம் பஸ் ஸ்டாண்ட் அருகில் 3 பைக்குகளில் வந்த 6 பேரை பிடித்து சோதனை நடத்தினர்.
இதில், 50 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இது தொடர்பாக மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாதி சிவக்குமார் மகன் அப் பு, 25; வடக்குவெள்ளூர் பிரேம்குமார் மகன் சுதாகர்,26; தொப்பிளிக்குப்பம் வீரப்பன் மகன் விஜய், 27; தெற்கு வெள்ளூர் கோபாலகிருஷ்ணன் மகன் ராமமூர்த்தி,26; பெரியாக்குறிச்சி ராமலிங்கம் மகன் சாலமன்,26; வேப்பங்குறிச்சி லுாக்காஸ் மகன் பாலமுருகன், 25; என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனர்.