/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
/
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 6 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
ADDED : டிச 27, 2024 06:26 AM
கடலுார்: கடலுாரில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில்வே மேம்பாலம் அருகி்ல் கூடியிருந்த சூரப்பநாயக்கன்சாவடி இளங்கோ மகன் தங்கபாண்டியன், 29; கம்மியம்பேட்டை முருகன் மகன் மூர்த்தி,24; ராஜேந்திரன் மகன் சதீஷ்,24; குறிஞ்சிப்பாடி பாச்சாரப்பாளையம் பழனி மகன் ஹரிகிருஷ்ணன், 24; கடலுார் முதுநகர் ஜெயசங்கர் மகன் திவாகர், 23; வண்டிப்பாளையம் ரமேஷ் மகன் ராஜி,27; ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும், தங்கபாண்டியன், மூர்த்தி, சதீஷ் ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து தங்கபாண்டியன் உட்பட 6 பேரை கைது செய்து, 2 இரும்பு பைப், 2 கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.