/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
/
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 6 பேர் படுகாயம்
ADDED : நவ 12, 2025 10:19 PM
கடலுார்: ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்த னர்.
கடலுார் அடுத்த நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சென்னையில் நடந்த வில்வித்தை போட்டிக்காக சென்னைக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு கடலுார் திரும்பினர்.
கடலுாரிலிருந்து நெல்லிக்குப்பத்திற்கு ஷேர் ஆட்டோ ஒன்றில் 6 மாணவர்கள், ஒரு பயிற்சியாளர் மற்றும் பெற்றோர் 2 பேர் புறப்பட்டனர்.
ஆட்டோவை டிரைவர் அருண் ஓட்டிச்சென்றார். கம்மியம்பேட்டை சுடுகாடு அருகே சென்ற போது, ஒரு பன்றி சாலையின் குறுக்கே ஓடியது.
அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பிரேக் அடித்ததில், ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர்.
அதில் பண்ருட்டி சுந்தரவாண்டியைச் சேர்ந்த பிரபு மகன் துஷ்யந்தன், நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் மகன் துர்கேஷ்,13, ஆதிரை,33, தினேஷ்பாபு,31, மற்றும் 8 வயதுடையை இரண்டு சிறுவர்கள் உட்பட, 6 பேர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

