/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் டிராக்டரிலிருந்து தவறி விழுந்தவர் பலி
/
குடிநீர் டிராக்டரிலிருந்து தவறி விழுந்தவர் பலி
ADDED : நவ 12, 2025 10:19 PM

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர், அப்பாவு தெருவை சேர்ந்தவர் வேல்முருகன்,56; குடிநீர் டிராக்டரில் தண்ணீர் திறந்து விடும் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை 5:45 மணிக்கு வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்வதற்காக, டிராக்டரில் வேலைக்கு சென்றார். டிராக்டரை கடலுார், நவநீத நகரைச்சேர்ந்த டிரைவர் சரவணன்,40; என்பவர் ஓட்டினார்.
கம்மியம்பேட்டை தனி யார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, டிராக்டரில் இருந்து வேல்முருகன் தவறிவிழுந்தார் . பின் சக்கரம் அவரது உடலில் ஏறி இறங்கியதில் வேல்முருகன் அதே இடத்தில் இறந்தார்.
புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

