/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாட்டரி விற்க உடந்தை 6 போலீசார் 'சஸ்பெண்ட்'
/
லாட்டரி விற்க உடந்தை 6 போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 05, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில் லாட்டரி வியாபாரிக்கு உடந்தையாக இருந்த புகாரில் 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த நசீர், 53, லாட்டரி சீட்டு விற்பனை செய்ய உடந்தையாக இருந்ததாக, டி.எஸ்.பி., லாமேக், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பரணிதரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், காவலர்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் கார்த்திக் ஆகியோரை நேற்று முன்தினம் வேலுார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, டி.எஸ்.பி.,யை தவிர மற்ற 6 பேரும் நேற்றிரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.