/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாட்டரி மாமூல் 6 போலீசார் 'சஸ்பெண்ட்'
/
லாட்டரி மாமூல் 6 போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 06, 2025 02:34 AM
கடலுார்:கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த நசீர், 53, சட்ட விரோதமாக வெளிமாநில மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் பெரும் புள்ளியாக செயல்பட்டு வந்தார்.
இவரிடம், சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக், நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, எஸ்.ஐ., பரணீதரன், சிறப்பு எஸ்.ஐ., நடராஜன், காவலர்கள் கணேசன், கோபாலகிருஷ்ணன், தனிப்பிரிவு காவலர் கார்த்திக் ஆகியோர் மாமூல் வசூலித்து வந்தது தெரியவந்தது.
இவர்களை வேலுார் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் உத்தரவிட்டார். இந்நிலையில், டி.எஸ்.பி., தவிர மற்ற ஆறு பேரையும், 'சஸ்பெண்ட்' செய்து, கடலுார் எஸ்.பி., ஜெயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். டி.எஸ்.பி.,யிடம் தொடர் விசாரணை நடக்கிறது.