/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
700 கிலோ ரேஷன் அரிசி பண்ருட்டியில் பறிமுதல்
/
700 கிலோ ரேஷன் அரிசி பண்ருட்டியில் பறிமுதல்
ADDED : மே 15, 2025 11:42 PM
பண்ருட்டி: வீட்டில் பதுக்கிய 700 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தில் பாழடைந்த வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஞானமூர்த்தி உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், தலா 50 கிலோ வீதம் மொத்தம் 14 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்தது தெரிந்து.
இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி அரசு சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.
அரிசி மூட்டைகளை பதுக்கியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.