ADDED : நவ 13, 2024 09:16 PM

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் லால்பேட்டையில் அதிகபட்சமாக 75 மி.மீ., மழை பதிவாகியது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், கடலுார் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மழை பெய்ததால், கல்லுாரி மாணவ, மாணவியர்கள் நனைந்தபடியும், குடை பிடித்தப்படியும் சென்றனர். கடலுாரில் தொடர் மழை காரணமாக பிரதான சாலைகளில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடலுார் அடுத்த பாதிரிக்குப்பத்தில் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை லால்பேட்டை 75, மி.மீட்டர் மழை பதிவாகியது. மேலும், அண்ணாமலைநகர் 60.03, சிதம்பரம் 58.44, கலெக்டர் அலுவலகம் 57.25, காட்டுமன்னார்கோவில் 57.06, வடகுத்து 53.07, கடலுார் 46.88, புவனகிரி 42.09, சேத்தியாத்தோப்பு 34.21, ஸ்ரீமுஷ்ணம் 32.31, எஸ்.ஆர்.சி., குடிதாங்கி 31.01, பரங்கிப்பேட்டை 30.41, வானமாதேவி 26.01, பெலாந்துறை 24.41, கொத்தவாச்சேரி 21.01, பண்ருட்டி 19.01, குறிஞ்சிப்பாடி 15.01, மீ மாத்துார் 12.01, காட்டுமயிலுார் 10.02, வேப்பூர் 8.02, குப்பநத்தம் 7.42, தொழுதுார் 7.02, விருத்தாசலம் 6.02, கீழ்செருவாய் 3.2 மி.மீட்டர் மழை பதிவாகியது.